பக்கங்கள்

திங்கள், 24 நவம்பர், 2014

தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்

தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்

நன்றாக விளையாடிவிட்டு மூச்சிரைக்க ஓடி வந்து கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. நாம் தான் மினரல் வாட்டர்களுக்கு மாறியாகி விட்டாச்சே. வீட்டி லேயே தண்ணீரை காய்ச்சி குடித்துவிட்டு வெளியிடங் களுக்கு சென்று தண்ணீர் பருகினால் நமக்கு அடுத்த நாட்களே வந்துவிடுகிறது சளி. ஏனெனில் நாம் பருகும் தண்ணீரி லிருந்து உண்ணும் உணவு வரை அனைத்தும் இரசாயன கலப்படமாக மாறிவிட்டது.
சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மருதம்பட்டையை, வெது வெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்சினையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.
மேலும், செரிமானத்தையும் சீராக்கும். ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர் கண்டிப்பாக இருக்கும்.
பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது. நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும்.
அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர் போன்று செயல்படும். கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது. வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.
விடுதலை,திங்கள், 24 நவம்பர் 2014 14:52

சனி, 1 நவம்பர், 2014

இராவண மருத்துவ நூல்கள்

பிற மொழிகளில் இராவண 


மருத்துவ நூல்கள்

புனித இராவணன் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தாய் தனித் தமிழில் இயற்றிய ஆதித் தமிழர்களின் அரிய மருத்துவக் கலை, தமிழ் மக்களின் அறி வுக்கு எட்டாதவாறு அபகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டும், அடுத்தவர் மொழிக்கு மாற்றப்பட்டும் விட்ட சூழ்நிலையில் இவ்வையகத்து மக்களின் மெய் நலனுக்காக தமிழ் மருத்துவம் தந்த அந்த ஒப்பற்ற தமிழ்த் தலைவரை இழிவுபடுத்தித் திட்டமிட்டு எழுதி வைத்த கட்டுக் கதைகளை நம்பி வாழ்ந்துவரும் தமிழ்  மக்கள் மத்தியில் அவர் இயற்றிய தமிழ் மருத்துவம் பிற மொழி மருத்துவர்களால் அபகரித்து எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இராவணனை இழிவுபடுத்தி இட்டுக் கட்டிய பொய்க் கதைகளை எழுதி தமிழர்களிடம் அன்னாரை ஒரு அரக்கனாக, கொடுங் குணங் கொண்டவனாக சித்தரித்து மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு, அவர் இயற்றிய மருத்துவத்தை அன்னாரை இழிவுபடுத்தியவர்களால் பெருமளவில் கையாளப்பட்டு வரும் நிச நிலையை தமிழ் மருத்துவர்களும், தமிழ் கூறும் மக்களும் தெரிந்து கொள்ள வேண்டு மென்ற நன்னோக்கத்தில் எங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஆதார அடிப்படை யில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
1.இராவணன் தீ நீர் மருத்துவம்: அர்க்கபிரகாசம் எனும் பெயரில் மலையாள மொழியில் வெளியிடப் பட்டுள்ளது. இந்நூல் மூலிகை மற்றும் கடைச் சரக்குகளை முறைப்படி தீ நீராகச் செய்து அனைத்து வகையான வியாதிகளுக்கும் வழங்கும் அரிய மருத்துவ முறையாகும்.
இந்நூலை மீண்டும் தமிழாக்கம் செய்து சென்னை பெசன்ட் நகர் முனைவர் இர. வாசுதேவன் Ph.D. அவர்கள் வெளியிட் டுள்ளார்கள். தொடர்புக்கு அலைபேசி - 9444892216. மேலும் இராவணன் இயற்றிய குழந்தை மருத்துவம் குமார தந்திர என்ற பெயரில் ஆந்திராவில் தெலுங்கிலும் வட இந்தியாவில் ஆங்கி லத்திலும் இராவணன் பெயரிலேயே நூலாக உள்ளது என்ற தகவலையும், முனைவர் இர. வாசுதேவன் அவர்கள் எமக்கு அளித்துள்ளார். எனவே குமரி மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள குழந்தை மருத்துவத்தின் மூல நூல் இராவணன் இயற்றிய மதலைவாகட நூலே என்பது தெளிவாக தெரிகிறது.
2. இந்த தீ நீர் மருத்துவ நூல் தெலுங்கில் அர்க்க பிரகாச என இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இராவணன் இயற்றிய மாதர் மருத்து வத்தில் ஒரு சிறு பகுதி அடங்கிய நூலும் தெலுங்கு மொழியிலுள்ளது.
3. இராவணன் மருத்துவ நூல் பல, தென் இலங்கையில் சிங்கள மொழியில் இருப்பதாக 2000ஆம் ஆண்டு தமிழ் ஈழத்திலிருந்து மரு. சிவ சண்முக ராசா  (சி), (கந்தரோடை, சுன்னாகம்) அவர் களால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து சித்த மருத்துவம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. இராவணன் தீ நீர் மருத்துவ நூல் 16ஆம் நூற்றாண்டில் உருது மொழியில் மொழி பெயர்த்து பாகித்தானில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒரு தகவல் உள்ளது.
5. இந்தி மொழியில் இராவணன் சம் கீத என்ற பெயரில் இராவண மருத்துவ இரு அறிவியல் நூல்கள் வட இந்தியா வில் வெளியிடப்பட்டுள்ளன. அவற் றிலுள்ள உள்ளடக்க அறிவியல் தகவல் இங்கே தரப்படுகின்றன.
1. இராவணன் பிறப்பு, 2. வான் அறிவியல், 3 நட்சததிரங்களின் நகர்வு, 4. மதலை நோய் மருத்துவம் (குழந்தை மருத்துவம்), 5. மக்கள் நோய் மருத்துவம், 6. பற்ப, செந்தூர, தீ நீர் வகைகள், 7. மானுட மருத்துவம் , 8.புவியியல் அறிவு தகவல்கள், 9. இரச மருந்துகளின் வீரி யங்கள், தயாரிப்பு முறைகள், 10. யோகா சன செய்முறைப் பயிற்சி, 11. யோகாசன மருத்துவப் பரிகார முறை (யோகா தெரபி), 12. யோகாசனங்களின் வகைகள், 13. சஞ்சீவி முறைகள், 14. உப்பு முறைகள், 15. இராமன் இராவணனை புகழ்தல், 16. பொது மருத்துவ அறிவியல் முறை கள், 17. சிர நோய் மருத்துவம், 18. கிரகங் களின் இடப்பெயர்ச்சிக்கு தீர்வு இந்நூல் களில் மேலும் பல தகவல்கள் உள்ளன.
6. இது மட்டுமன்றி இராவணன் இயற்றிய நாடி நூலும் வட இந்திய தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறீ இராவண நாடி கிறிதா என்ற பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட சமஸ் கிருத சுலோகங்களுடன் இந்தி மொழி யில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலை மீண்டும் தமிழாக்கம் செய்து சென்னை தியாகராச நகர் புதிய புத்தக உலகம் சிறிய இராவண நாடி பரீட்சை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
7. பர்மா நாட்டில் இராவண மருத் துவ நூல்கள் மொழி மாற்றம் செய்யப் படாமல் அசல் தமிழ் நூல்களாகவே இருப்பதாக தகவல் உள்ளன. அதை பெறுவதற்கு தமிழக அரசும், தமிழ் மருத்துவ உலகமும் தீவிர முயற்சி மேற் கொள்ள வேண்டும். குமரி மாவட்டத் திலும் கேரள மாநிலத்தில் திருவனந்த புரம் மாவட்டத்திலும் சில குறிப்பிட்ட பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் கோர்வையாக இராவண மருத்துவ நூல்கள் அசல் தமிழ் நூல்களாகவே இருப்பதாக சில ஆசான்கள் கூறுகின் றனர். இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இந்த அறிவியல் கிடைத்திட பாடுபடா விட்டால் மிகப் பெரிய தமிழர் அறிவி யலை நாம் இழந்து விட நேரிடும் என் பதை நாம் நினைவில் கொள்ள வேண் டும். இன்னும் பல அரிய தமிழர் அறிவி யல் தகவல்களுடன் இந்தி மொழியி லுள்ள இராவண நூல்களில் ஒன்று 1 கிலோ எடை உள்ளது. அதன் விலை ரூ.500/-_ இன்னொரு நூல் சுமார் 5 கிலோ எடை உள்ளது அதன் விலை ரூ.2000/-_ இந்நூல்களை வாங்கி படிக்க வும் வாங்கி தமிழாக்கம் செய்யப்படவும் வேண்டும். இந்நூல்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Manoj Publications,
1583-84, Daribakalam,
Chandhi Chowk, Delhi -6,
Mobile - 09818753569
இராவணனின் மற்றுமொரு மிகப் பெரிய இந்தி மொழி நூல் ரூ.7500/-_ பெறுமானது. இது மூன்று தொகுதியாக வெளியிடப்பட்டுள்ள மிகப் பெரிய நூலாகும். இதில் தமிழர்களின் மருத்துவ அறிவியல் அதிகமாக அடங்கியுள்ள தாக தகவல் கிடைத்துள்ளது. அதன் முகவரி மற்றும் தகவல் பெற
Tantratmak ravan Samhita
Edited by Swami Premanand ‘Alakh’
D.P.B. Publications, 110, Chawari Lazar,
Chawk, Badshahbulla, Post Box No:2037,
Delhi- 110 006.  ªî£ì˜¹‚°: 011232516300
தொடர்புக்கு: 011232516300
இந்நூல்களை பெற விரும்புவோர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொண்டு பேசி தகவலறிந்து பணம் செலுத்தி நூலை பெறலாம். இந்த முக வரிகளை எமக்கு அளித்த மரபுதமிழ் மருத்துவர் திரு. தாமரை செல்வன் (வியாசர்பாடி, சென்னை) அவர்களுக்கு நன்றி. அவரது அலைபேசி: 9444580701. அரசு பணியாளரான அவரிடம் இரவு 6.30 மணிக்கு மேல் தொடர்பு கொள்ள லாம். மேலும் வட இந்தியாவில் இந்தி மொழியாக்கம் செய்யப்பட்ட ரூ.20,000/-_ (இருபதாயிரம் விலையுடைய மிகப் பெரிய இராவண நூல் உள்ளது. இன்னும் 50க்கும் மேற்பட்ட பல இராவணன் நூல்கள் வட இந்தியாவில் இருப்பதாக மேலும் சில தகவல்கள் கூறுகின்றன.
(மருத்துவர் பு.சாலின் மனோகர் எழுதிய அவசர கால புறமருத்துவ 

முறைகள் எனும் நூலிலிருந்து....


-விடுதலை நாளேடு 18.10.14

Read more: http://www.viduthalai.in/page-1/89477.html#ixzz3HodiehdA