பக்கங்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

குதிகால் வலிக்கு நிவாரணம்


குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற் பட்டுள்ளதா என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால்  பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும்.
உள்ளங்கால் மற்றும்  கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு  படுக்கும் முன்னும், காலையில் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.
சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லியும் கலந்து ஒரு இரும்பு கரண்டியில் சிறிது எண்ணெயை (10 மி.லி.) சூடு செய்து  இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு,
குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து(20 நிமிடங்கள் வரை ) வெந்நீர் நிரப்பிய  பாத்திரத்தில் கால் மூழ்குமளவு 10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில்  குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம்.
கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபயோகிக்கவும். திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்டுகள்  காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.
சித்தரத்தை,  அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால்  மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம்  அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குணமாகும். குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும்  சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும்.
பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத்  தடுக்கலாம். அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வரக் காரணமாகின்றது.
ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம்  ஏற்படுத்தி, உங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது.
-விடுதலை,2.3.15

சனி, 5 டிசம்பர், 2015

இழுப்பு என்னும் இசிவு நோய்


குழந்தைக்கு இழுப்பு நோய் வந்தால் கை-கால் உதறி பல் கிட்ட ஆரம்பிக்கும். உடனே காயப்படுத்தாத சிறு பென்சில் அல்லது கட்டையை இரு பல் வரிசைக்கு நடுவே வைத்து விடவேண்டும் பிறகு இஞ்சியை தட்டி சாறு எடுத்து சர்க்கரை சேர்த்துப் புகட்டிவிட வேண்டும். பூண்டைத்தட்டி ஒரு துணியில் கட்டி விளக்கில் காட்டினால் அதிலிருந்து ஒரு எண்ணெய் வழியும் அதை உள்ளங்கை மற்றும் உள்ளங்கால், விலா முதலிய இடங்களில் தடவ வேண்டும்.
வேப்பெண்ணெய்யும் தடவலாம். சிறு குழந்தைகள் இருக்குமிடத்தில் இந்த எண்ணெய்யை வைத்திருப்பது நல்லது. குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வந்தால், தினசரி 3 வேளை, 2 தேக்கரண்ழ அளவு திராட்சைப் பழச்சாறு கொடுங்கள். வலிப்பு நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் திராட்சைப் பழத்திற்கு மட்டுமே உண்டு.
தூதுவளை இலைச்சாறு இஞ்சிச்சாறு, துளசிச்சாறு இவைகளை ஒன்று சேர்த்து, அதற்கேற்ப தேன் சேர்த்து, ஒரு தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்கு 3- நாட்கள் கொடுக்க, தெக்கத்திக்கணை என்னும் இழுப்பு உடனே நிற்கும். கபம் கரைந்து ஆரோக்கியம் பெறும்.  சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிந்து இருக்கும். அதை நீக்க மாசிக்காயை சந்தனக்கல்லில் உரசி.
அந்த விழுதை குழந்தையோட நாக்கில் தடவினால் போதும். சின்னக் குழந்தை வாந்தி பண்ணினால் வசம்பைச்சுட்டுப் பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து, நாக்கில் தடவினால் உடனே குணம் கிடைக்கும்.
வசம்புக்கு பிள்ளை வளர்ப்பான்னு பேரே உண்டு. குழந்தைகளுக்கு வாந்தியும், பேதியுமானால், மருந்துக் கடையில் கிடைக்கக் கூடிய துளசி விதையை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து, ஒரு சங்கு வீதம் கொடுக்க, உடனே நிற்கும். துளசிச் சாற்றில் ஒரு காசு எடை எடுத்து வெற்றிலையில் விட்டு கொஞ்சம் தேன் சேர்த்துக் குழப்பி குழந்தையின் வாயில் தடவினால் வாந்தி நின்றுவிடும். குழந்தை நன்றாகப் பால் குடிக்கும்.
துளசி விதையை நனறாக அரைத்துப் பசும்பாலில் கலந்து, ஒரு சங்கு வீதம் கொடுக்க வாந்தியும் பேதியும் உடனே நிற்கும். ஒரு வயது குழந்தைக்கு பல் முளைக்கும்போது, மலக்கட்டு உண்டாகும். ஜலதோஷம், காய்ச்சல் உண்டாகும். அப்போது திராட்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து, தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு கொடுத்துவரவும்.
-விடுதலை,10.9.12

சனி, 14 நவம்பர், 2015

ஆயுர்வேதத்தில் மாட்டிறைச்சி மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது அறிவியல் அறிஞர் பி.எம். பார்கவா அறிவிப்பு


இந்தியாவின் பழமை யான வேதமருத்துவ முறை யாகக் கருதப்படும் ஆயுர் வேதத்தில் மாட்டிறைச்சி பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்பட்டது என்று எழுதப்பட்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தலைசிறந்த ஆயுர் வேத நூலாசிரியரும் ஆயுர் வேத மருத்துவருமான ஆச்சாரியா சரகா தன்னு டைய நூலில் மாட்டி றைச்சியின் மருத்துவ குணம் பற்றி அதிகமாக குறிப்பிட்டுள்ளார் என்று பிரபல அறிவியல் ஆய்வா ளரான பி.எம்.பார்கவா கூறியுள்ளார்.
பசு இறைச்சியின் பயன்கள்
சாரக சம்ஹிதா என்ற ஆயுர்வேத நூலாசிரியரின் குறிப்புகள் பற்றி ஆய்வு செய்த பார்கவா இது குறித்து பத்திரிகையளர்களி டம் பேசினார், அப்போது அவர் கூறியதாவது: பசுவின் இறைச்சித் துண்டை நன்கு வேக வைத்து உண்ணும் போது காய்ச்சல், வாயு தொடர் பான சிக்கல்கள், வறட்டு இருமல், உடல் மெலிவு அல்லது சோர்வு, போன்ற நோய்கள் உடனடியாகக் குணமடையும். மேலும் கடுமையான உழைப் பாளிகள் தங்களது உட லுக்கான சக்தியை உடன டியாகப் பெற பசுவின் இறைச்சியை உண்ண வேண்டும், பசுவின் எலும் பில் இருந்து காய்ச்சி வடித்த நீர்(சூப்) முதுகுவலி, உட்பட பல்வேறு எலும்பு தொடர்பான நோய்களைக் முற்றிலும் குணப்படுத்தும் தன்மையுடையன என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க.வின் முக்கிய திட்டம்
தாதரியில் உள்ள பிசாரா என்ற கிராமத்தில் அக்லாக் என்ற முதியவர் பசுமாட்டிறைச்சியை உண் டார் என்று வதந்தியைப் பரப்பி அவரைக் கொலை செய்ய முக்கியமான கார ணமாக கூறும் போது, புனிதமான பசுமாட்டைக் கொலைசெய்தார் என்பது தான் இதைவைத்து தான் பல்வேறு இந்து அமைப்பு களுடன் பாஜகவும் கூட்டு சேர்ந்து அக்லாக் கொலை வரை சென்று விட்டது. அக்லாக் கொலையைப் பொறுத்தவரை பசுமாடு குறித்த ஓர் அச்சத்தை சிறு பான்மை மக்களிடையே உருவாக்கி அவர்களை பதற்றமான மனநிலையில் வைக்கவேண்டும் என்பதே ஆளும் பாஜகவின் முக் கியத் திட்டமாக உள்ளது. இந்த கொலை மூலம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புக்கள் என்ன கூற வருகின்றன என்றால், மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எவ்வகையான செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதை இவர் கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நினைக் கின்றனர்.   மேலும் அறிவியல் அறிஞர் பார்கவா கூறும் போது மோடி அரசு அறிவியல் ஞானமற்ற போலித்தனமான கட்டுக் கதைகளை அறிவியல் என்று நம்பிக் கொண்டு இருக்கும் அரசு என்றும் குறிப்பிட்டுள்ளார். மோடி மதரீதியான நூல்களில் குறிப்பிட்டுள்ள கட்டுக் கதைகளை அறிவியல் என்று பல்வேறு தளங்களில் பேசி வருகிறார். இது மிகவும் கவலைக்குரியதாகும், மோடி போன்றவர்கள் இப்படிக்கூறும் போது உண்மையாக அறிவிய லுக்கு கட்டுக்கதைகளுக்கு இடையே வேறு பாடு தெரியாமல் இளம் தலை முறையினர் குழப்பமடை வார்கள்.
காலத்திற்கு ஒவ்வாதவை
மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை களை நிறைவேற்றுவ தையே மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது தலை யாய கடமைகளாக கொண்டு செயலாற்றிவருகிறது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் என்றுமே காலத்திற்கு ஒவ்வாதவை, அதில் ஒன்றுதான் பசு தொடர்பான பிரச் சனைகள் மத்திய பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டில் மதநல்லிணக்கம் மெல்ல மெல்ல சிதைந்து கொண்டிருக்கிறது, தற் போது அதன் வேகம் மேலும் அதிகரித்துள்ளது என்றும் கூறினார். ஆளும் பாஜக அரசு இந்திய அரசியலமைப்புச் சட் டத்தில் குறிப்பிட்டுள்ள அறிவியல் மனப்பான்மை மனிதத்தன்மை பகுத்தறிவு (கேள்வி கேட்கும் உரிமை) சீர்திருத்தம் போன்றவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற 51ஏ(எச்) என்ற சரத்தையே கேலிசெய்யும் விதமாக மூடநம்பிக்கை களை அறிவியல் என்று கூறுதல், அறிவிற்கு பொருத் தமில்லாத கட்டுக்கதை களை பாடமாகச் சேர்த்தல், இந்துத்துவ ஆதரவு மூட நம்பிக்கை எழுத்துக்களை அரசே பரப்பி வருவது போன்ற பல்வேறு செயல் பாடுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்களாக உள்ளது. மோடி அரசு இதையே தன்னுடைய கொள் கைகளாகக் கொண்டு அரச அதிகாரத்துடன் மக்களி டையே பரப்பும் செயலில் ஈடுபட்டு வருகிறது, கடந்த ஆண்டே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பெண்கள் என்பது ஆண்களுக்கு அடிமைகளாக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக கல்வி கற்ப தனால்தான் விவாகரத் துகள் அதிகம் உண்டாகின் றன என்றும் நமது கலாச் சாரத்தில் திருமணம் என்பது ஆண்களுக்கான சேவை செய்ய பெண்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் தானே தவிர, பெண் ஆணைவிட அதிக அதிகாரம் பெறக் கூடாது என்று கூறுகிறார். இதிலிருந்தே அந்த அமைப்பின் பிற்போக்குக் கொள்கை எப்படிப்பட்டது என்று தெரியவரும் என்றார்.
குடியரசுத் தலைவருக்குக் கடிதம்
பகுத்தறிவுவாதிகளும், தர்க்கவாதிகளுமான நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி போன்றோரின் கொலைகள் தொடர்பாக தனது கவலையைத் தெரிவித்த பார்கவா நவம்பர் 6 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  சுமார் 200க்கும் மேற்பட்ட பல்வேறு அறிவியல் ஆய் வாளர்கள் கையெழுத்து அடங்கிய அந்தக் கடித்ததில் நாட்டில் நடக்கும் சமூக அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் சம்பவங்கள் குறித்து அறிவுஜீவிகள் கவலைய டைந்துள்ளதாகவும், குடியரசுத் தலைவர் தலையிட்டு இந்தச் சிக்கலுக்கு முடிவு செய்ய வேண்டும் என்று  பி.எம். பார்கவா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-விடுதலை,14.11.15
.

புதன், 19 ஆகஸ்ட், 2015

எளிய இயற்கை வைத்தியக் குறிப்புகள்

Image result for இயற்கை மருத்துவம்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருள்களைக் கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
அய்ந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, வால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு குவளை தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். அல்லது வெற்றிலை, 4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்தச் சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜீரணமாவதோடு,உடல் குளிர்ச்சி யடையும்.அல்லது ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயுத் தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட் கொள்வதினால் வாயுத் தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா, ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பல் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்சியில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. செரிமானக் கோளாறு
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், செரிமான கோளாறு சரியாகும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து இரண்டு வேளை சாப்பிட்டால் செரிமானக் கோளாறு குணமாகி பசி ஏற்படும்.
ஒமம், கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் செரிமானக்கோளாறு சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும், இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
-விடுதலை,17.8.15

சனி, 15 ஆகஸ்ட், 2015

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?


சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய வழி இதோ... சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
தனியா - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ
தனித்தனியாக மேற்கண்டவற்றை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து தனித் தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு தேக்கரண்டி பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி தினமும் மூன்று வேளை சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.
சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
-விடுதலை,10.8.15