பக்கங்கள்

சனி, 30 நவம்பர், 2019

நோய்தீர்க்கும் மீன் உணவு

சிதம்பரம் அருகில் கிள்ளை ஆற்றுப் பகுதிகளில் அரிய வகை மருத்துவ குணம் உள்ள மீன்கள் உள்ளன. காரை, மட்லீஸ், கிழங்கான், பிலிஞ்சான், ஓரா, பொருவா, சித்தாழை, நரிக்கெண்டை போன்ற மீன்களைக்கொண்டு ஒரு வகையான வட்டார மீன்குழம்பு செய்கின்றனர். அதனை பூண்டு, மிளகுடன் சேர்த்துச் செய்தால் மருந்துக் குழம்பு என்றழைக்கின்றனர்.பேறுகாலத்தில் பெண்களுக்கு வலி நிவாரணியாகவும் சோர்வைப் போக்குவதற்கு உதவுவதாகவும் இக்குழம்பு இருக்கிறது.  கணவாய் மீனிலுள்ள மக்னீசியம், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

திலேப்பியாவில் உள்ள செலினியம் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பால்சுறா மற்றும் திருக்கை மீன்கள் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்கிறது.சாளை மீனில் உள்ள அயோடின் கழுத்துக் கழலை நோயைத் தடுக்கிறது. கெளுத்தியிலுள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. கெண்டை மீனிலுள்ள பொட்டாசியம் தசையின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. ஆளி மீனிலுள்ள தாமிரச் சத்தில் இன்சுலின் சுரக்கச் செய்யும் மருத்துவ குணம் உள்ளது. மத்தி, ஆரை, கவலை போன்ற மீன்களிலுள்ள ‘ஒமேகா 3’ அமிலமானது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை வளர்த்து, ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி, நரம்புகளின் செயல்பாட்டை அதிகரித்து, நல்ல பார்வைத் திறனைத் தந்து உடம்பிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தக்கூடியவை.

-  உண்மை இதழ், 1-15.10.19

புதன், 20 மார்ச், 2019

மருந்துகளின் மூலங்கள்

சித்த மருந்துகள் செய்வதற்கு மூலப் பொருள்களாக அமையும் மருந்துகளை வைத்து சித்த மருத்துவத்தின் சிறப்பினை அறியலாம்.

அவை வருமாறு,
1. உப்பு வகைகள் – 25
2. உலோகங்கள் – 12
3. உபரசங்கள் – 120 
4.பாஷாணங்கள்-64
5.மூலிகைகள் - 1008
6.கடை மருந்துகள் - 64
ஆகும்.
இவை, பல்வேறு முறைகளில் மருந்தின் மூலப் பொருள்களாக அமைந்து நன்மருந்தாகி நோயைப் போக்கப் பயன்படுகின்றன.இவ்வாறு எந்த மருத்துவத்திலும் இல்லாத அளவு சித்த மருத்துவத்தில்1293 எண்ணிக்கைகள் கொண்ட மூலப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருத்துவத்தில் 
1. உப்பு, 2. பாடாணம், 3. உபரசம், 4. இரசம், 5. உலோகம், 6. கந்தகம் என ஆறு முறைகள் பின்பற்றப் படுகின்றன. மேலும் கட்டு, செந்தூரம், களங்கு, மெழுகு, தேன் போன்றவை ஆண்டுகள் பல ஆனாலும் வீரியம் கெடாமல் இருக்கும் மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன. மற்ற மருத்துவ முறைகளில் இல்லாத வகையில் பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப் படுவது சித்த மருத்துவ முறையில் மட்டுமே
பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து செய்யும் முறைகளாவன,

1. இரசம் செய்முறை 
2. இரசக் செந்தூரம் செய்முறை
3. வீரம் செய்முறை 
4. பூரம் செய்முறை
5. அரிதாரம் செய்முறை

இயற்கையில் கிடைக்கக் கூடிய பாஷாணங்கள் 32 ஆகும். அவற்றைக் கொண்டு, வைப்புமுறை என்னும் செய்முறைகளால் மேலும் 32 பாஷாணங்கள் சித்தர்களால் செய்யப்பட்ட செயற்கைப் பாஷாணங்கள்
மருந்துகளுக்கும் மருந்துகளைச் செய்வதற்கும் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பதால், சித்த மருத்துவம் எல்லா நிலைகளிலிருந்தும் ஆராயப் பெற்றவை எனக் கொள்ளலாம். விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகளும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

நல்ல பாம்பின் விஷத்தை எடுத்து, சூதம் ஒரு கழஞ்சு அந்த விஷத்துடன் கலந்து, வாலுகையில் ஒரு நாழிகை எரித்தால் சூதம் (ரசம்) கட்டும். அச் சூதக்கட்டு குருவாகும். அதனால் ஒன்பது வகையான உலோகங் களையும் உருக்கலாம் என்பர். இதனால், மருந்தாகப் பாம்பின் நஞ்சையும் பயன்படுத்தும் நிலையில் மருத்துவம் உயர்ந்திருப்பதை உணரலாம். அதேபோல, ஆனைத்தந்தம், குதிரைக் குளம்பு, ஒட்டகப் பிச்சு, கழுதை அமுரி, பன்றிக்குட்டி, நாய் மூளை, நரி மாமிசம், குரங்கு பிச்சு, ஓணான் பிச்சு, கெருடன் முட்டை, செம்போத்து, மயில் நெய், கிளியிறகு, நாணுவான் முட்டை, சக்கிர வாகம், அன்னம்–காக்கை முட்டை, கோழிமுட்டை, ஆந்தை–குயில் முட்டை, காட்டுப் புறா எச்சம், வீட்டுப் புறா எச்சம், தாரா முட்டை, ஊர்க்குருவி விந்து, அளுங்கு–உடும்பு நெய், முதலை நெய் , ஆமை, கல்லாமை, கட் டெறும்பு, பூனாகம், இந்திர கோபம், கரு நாகப் பாம்பு, நாகப்பாம்பு போன்றவை மருந்து செய் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.