பக்கங்கள்

சனி, 14 நவம்பர், 2015

ஆயுர்வேதத்தில் மாட்டிறைச்சி மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது அறிவியல் அறிஞர் பி.எம். பார்கவா அறிவிப்பு


இந்தியாவின் பழமை யான வேதமருத்துவ முறை யாகக் கருதப்படும் ஆயுர் வேதத்தில் மாட்டிறைச்சி பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்பட்டது என்று எழுதப்பட்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தலைசிறந்த ஆயுர் வேத நூலாசிரியரும் ஆயுர் வேத மருத்துவருமான ஆச்சாரியா சரகா தன்னு டைய நூலில் மாட்டி றைச்சியின் மருத்துவ குணம் பற்றி அதிகமாக குறிப்பிட்டுள்ளார் என்று பிரபல அறிவியல் ஆய்வா ளரான பி.எம்.பார்கவா கூறியுள்ளார்.
பசு இறைச்சியின் பயன்கள்
சாரக சம்ஹிதா என்ற ஆயுர்வேத நூலாசிரியரின் குறிப்புகள் பற்றி ஆய்வு செய்த பார்கவா இது குறித்து பத்திரிகையளர்களி டம் பேசினார், அப்போது அவர் கூறியதாவது: பசுவின் இறைச்சித் துண்டை நன்கு வேக வைத்து உண்ணும் போது காய்ச்சல், வாயு தொடர் பான சிக்கல்கள், வறட்டு இருமல், உடல் மெலிவு அல்லது சோர்வு, போன்ற நோய்கள் உடனடியாகக் குணமடையும். மேலும் கடுமையான உழைப் பாளிகள் தங்களது உட லுக்கான சக்தியை உடன டியாகப் பெற பசுவின் இறைச்சியை உண்ண வேண்டும், பசுவின் எலும் பில் இருந்து காய்ச்சி வடித்த நீர்(சூப்) முதுகுவலி, உட்பட பல்வேறு எலும்பு தொடர்பான நோய்களைக் முற்றிலும் குணப்படுத்தும் தன்மையுடையன என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க.வின் முக்கிய திட்டம்
தாதரியில் உள்ள பிசாரா என்ற கிராமத்தில் அக்லாக் என்ற முதியவர் பசுமாட்டிறைச்சியை உண் டார் என்று வதந்தியைப் பரப்பி அவரைக் கொலை செய்ய முக்கியமான கார ணமாக கூறும் போது, புனிதமான பசுமாட்டைக் கொலைசெய்தார் என்பது தான் இதைவைத்து தான் பல்வேறு இந்து அமைப்பு களுடன் பாஜகவும் கூட்டு சேர்ந்து அக்லாக் கொலை வரை சென்று விட்டது. அக்லாக் கொலையைப் பொறுத்தவரை பசுமாடு குறித்த ஓர் அச்சத்தை சிறு பான்மை மக்களிடையே உருவாக்கி அவர்களை பதற்றமான மனநிலையில் வைக்கவேண்டும் என்பதே ஆளும் பாஜகவின் முக் கியத் திட்டமாக உள்ளது. இந்த கொலை மூலம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புக்கள் என்ன கூற வருகின்றன என்றால், மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எவ்வகையான செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதை இவர் கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நினைக் கின்றனர்.   மேலும் அறிவியல் அறிஞர் பார்கவா கூறும் போது மோடி அரசு அறிவியல் ஞானமற்ற போலித்தனமான கட்டுக் கதைகளை அறிவியல் என்று நம்பிக் கொண்டு இருக்கும் அரசு என்றும் குறிப்பிட்டுள்ளார். மோடி மதரீதியான நூல்களில் குறிப்பிட்டுள்ள கட்டுக் கதைகளை அறிவியல் என்று பல்வேறு தளங்களில் பேசி வருகிறார். இது மிகவும் கவலைக்குரியதாகும், மோடி போன்றவர்கள் இப்படிக்கூறும் போது உண்மையாக அறிவிய லுக்கு கட்டுக்கதைகளுக்கு இடையே வேறு பாடு தெரியாமல் இளம் தலை முறையினர் குழப்பமடை வார்கள்.
காலத்திற்கு ஒவ்வாதவை
மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை களை நிறைவேற்றுவ தையே மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது தலை யாய கடமைகளாக கொண்டு செயலாற்றிவருகிறது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகள் என்றுமே காலத்திற்கு ஒவ்வாதவை, அதில் ஒன்றுதான் பசு தொடர்பான பிரச் சனைகள் மத்திய பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டில் மதநல்லிணக்கம் மெல்ல மெல்ல சிதைந்து கொண்டிருக்கிறது, தற் போது அதன் வேகம் மேலும் அதிகரித்துள்ளது என்றும் கூறினார். ஆளும் பாஜக அரசு இந்திய அரசியலமைப்புச் சட் டத்தில் குறிப்பிட்டுள்ள அறிவியல் மனப்பான்மை மனிதத்தன்மை பகுத்தறிவு (கேள்வி கேட்கும் உரிமை) சீர்திருத்தம் போன்றவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற 51ஏ(எச்) என்ற சரத்தையே கேலிசெய்யும் விதமாக மூடநம்பிக்கை களை அறிவியல் என்று கூறுதல், அறிவிற்கு பொருத் தமில்லாத கட்டுக்கதை களை பாடமாகச் சேர்த்தல், இந்துத்துவ ஆதரவு மூட நம்பிக்கை எழுத்துக்களை அரசே பரப்பி வருவது போன்ற பல்வேறு செயல் பாடுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்களாக உள்ளது. மோடி அரசு இதையே தன்னுடைய கொள் கைகளாகக் கொண்டு அரச அதிகாரத்துடன் மக்களி டையே பரப்பும் செயலில் ஈடுபட்டு வருகிறது, கடந்த ஆண்டே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பெண்கள் என்பது ஆண்களுக்கு அடிமைகளாக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக கல்வி கற்ப தனால்தான் விவாகரத் துகள் அதிகம் உண்டாகின் றன என்றும் நமது கலாச் சாரத்தில் திருமணம் என்பது ஆண்களுக்கான சேவை செய்ய பெண்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் தானே தவிர, பெண் ஆணைவிட அதிக அதிகாரம் பெறக் கூடாது என்று கூறுகிறார். இதிலிருந்தே அந்த அமைப்பின் பிற்போக்குக் கொள்கை எப்படிப்பட்டது என்று தெரியவரும் என்றார்.
குடியரசுத் தலைவருக்குக் கடிதம்
பகுத்தறிவுவாதிகளும், தர்க்கவாதிகளுமான நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி போன்றோரின் கொலைகள் தொடர்பாக தனது கவலையைத் தெரிவித்த பார்கவா நவம்பர் 6 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  சுமார் 200க்கும் மேற்பட்ட பல்வேறு அறிவியல் ஆய் வாளர்கள் கையெழுத்து அடங்கிய அந்தக் கடித்ததில் நாட்டில் நடக்கும் சமூக அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் சம்பவங்கள் குறித்து அறிவுஜீவிகள் கவலைய டைந்துள்ளதாகவும், குடியரசுத் தலைவர் தலையிட்டு இந்தச் சிக்கலுக்கு முடிவு செய்ய வேண்டும் என்று  பி.எம். பார்கவா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-விடுதலை,14.11.15
.