பக்கங்கள்

வெள்ளி, 23 நவம்பர், 2018

இச்சாபத்தியம்

அடுத்து இச்சாபத்தியம், என்பது கடுகு, நல்லெண்ணெய், வெண் பூசணிகாய், பரங்கிகாய், மாங்காய், தேங்காய், பூண்டு, பெருங்காயம், அகத்திக்கீரை, புகை, போதை, பகல்தூக்கம், ஆகியவை விளக்கி பத்தியத்தில் உண்பதை மட்டும் உண்ணுதல் இச்சாபத்தியம் என்று சித்தர்கள் சொன்னார்கள்.
மேலும் விவரங்களுக்கு siddhasankaran என்று டைப் செய்து பேஸ்புக் பார்க்கலாமே.

செவ்வாய், 17 ஜூலை, 2018

*சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்*🌱

🌿 *சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்*🌱

*சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.*
🌳அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, *சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.*

🌵 *உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.*

🐲 *கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்*🐾

☘குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

🐌 *கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்*🦂

🌲குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

🍁குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

🐉 *கிருமிகள் உருவாகக் காரணம்*🐛

🐞கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

🌴அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

🎋நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

👁  *கண் நோய்*:

🍃கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

🍀 *பொதுக் காரணங்கள்* :

🐹வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.
*அவை* : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

🐰 *சிறப்புக் காரணம்* :

👶சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

🌿 *காசநோய்* :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

🌿 *வெள்ளெழுத்து*

🍃கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

🍁முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

🍀கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

😨 *தலைநோய்* :

🍒உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

🍋தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

🍍ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

😨 *கபால நோயின் வகை* :

🕷வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

🍎தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

🍊 *அம்மை நோய்* :

🍏அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

🍇மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

🌽அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

🍒 *இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.*🐉

🎃 அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

🌿 *சித்த மருத்துவம்* கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி
2. பாலம்மை

3. மிளகம்மை
4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை
6. உப்புதரியம்மை

7. கடுகம்மை
8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை
10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை
12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை
14. தவளை அம்மை

என்பனவாகும்.
இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும்.
அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.
- முகமது அலி வி - நாட்டு மருத்துவம், முகநூல் பக்கம், 17.7.18
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாம்! தி.மு. கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!


சென்னை, ஏப்.8 “மத்திய அதிகாரக் குவியலுக்கான தொடர் வேட்டையாக சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருப்பது கடும் கண்ட னத்துக்குரியது”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு. கழகச் செயல் தலைவர்  6.4.2018 அன்று விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவக் கல்வியில் சேருவதற்கான “நீட்” தேர்வை, பல்வேறு மாநிலங்களில் உள்ள சமுதாய அமைப்புகளும், மாணவர்களும் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி, நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துக் கல்விக் கனவை முற்றிலுமாகச் சிதைத்துவிட்ட மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட (ஆயுஷ் ) படிப்புகளில் சேரு வதற்கும் நீட் தேர்வு கட்டாயம் என்றும், நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில உரிமைகளுக்கு
முற்றிலும் விரோதமானது!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே நீட் தேர்வை அவசர அவசரமாக திணித்து, மாநிலங்களின் கல்வி உரிமையை அத்துமீறிப் பறித்துவிட்ட மத்திய பா.ஜ.க. அரசு இப்போது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளில் சேரு வதற்கும் “நீட்” தேர்வை கட்டாயம் கடைப்பிடிக்க வேண் டும் என்று உத்தரவிடுவது சமூகநீதிக் கொள்கைக்கும், சமத்துவத்திற்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் முற்றிலும் விரோதமானது மட்டுமல்ல, மத்திய அதிகாரக் குவியலுக்கான தொடர் வேட்டையாகவே நான் கருதுகிறேன்.
கிராமப்புறங்களுக்குத் தேவைப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில், ஏற்கெனவே நீட் தேர்வு மூலம் அடாவடியாக செயல்பட்டுக் கொண்டி ருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது கிராமப்புற சுகாதாரத் தேவைகளுக்காக எஞ்சியிருக்கும் சித்தா உள்ளிட்ட  ஆயுஷ் படிப்புகளின் மீதும் கை வைப்பது எதேச்சதிகாரமானது.
அதுமட்டுமின்றி, கிராமப்புற மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன என்ற பா.ஜ.க.வின் உள்நோக்கத் தையும் மக்கள் விரோத
எண்ணத்தையும் இது வெளிப் படுத்துகிறது.
ஆகவே, சித்தா உள்ளிட்ட  ஆயுஷ் படிப்பு களுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் உத்தரவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறேன்.


கிராமப்புற வளர்ச்சியில், அங்குள்ள மக்களின் சுகாதாரத் தேவைகளில் உள்ளபடியே மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இருக்குமேயானால், சித்தா உள்ளிட்ட  ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் டூ அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிப்பது மட்டுமின்றி, மருத்துவப் படிப்பிற்கும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக் களிக்கும் விதத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமன தாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு. கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலை நாளேடு, 8.4.18

புதன், 10 ஜனவரி, 2018

பண்டைய நாவித அறுத்துவர்கள்


-டாக்டர் சு.நரேந்திரன்அறுவை மருத்துவர்கள்

வரலாற்றின் இடைக்காலத்தில் நாவிதர் களே பொதுவான மருத்துவ சிகிச்சையை எல்லோருக்கும் செய்து வந்தனர் என்றா லும் குறிப்பாகப் போர்க் காலங்களிலும், அதன் பிறகு ராணுவ வீரர்களுக்கு மருத்து வமும், அறுத்துவமும் புரிந்தனர்.  இதன் காரணமாக இவர்கள் தங்கள் வசம் தீட்டிய கத்தி ஒன்றை வைத்திருப்பது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக மருந்துகளால் நோய் குணமாகாது என்று மருத்துவர் களால் எண்ணப் பட்ட பொழுது அவர்கள் கட்டளைப்படி நாவிதர்கள் தேவையான அளவு கீறியோ அல்லது அட்டையைக் கடிக்கவிடுவதன் (Leeches) மூலமாகவோ இரத்தத்தை வெளியேற்றினர்.  இதை ஏன் மருத்துவர்கள் நாவிதர் களிடம் ஒப்படைத் தனர் என்றால், இது தனக்கு தரக்குறை வானது என்று எண்ணியதாலேயே ஆகும்.

பண்டைய காலத்தில் உலகளவில் நாவிதர்கள்

இலண்டனில் அறுவை சிகிச்சை செய்யும் நாவிதர்கள் சங்கம் (Guild of Surgeons) 
1318இல் உருவானது.  1505ஆம் ஆண்டு பாரீஸ் பல்கலைக் கழகத்தில் நாவி தர் அறுவை மருத்துவர்களைப் பேராசிரி யர்களாக நியமனம் செய்தது.  இங்கிலாந் தில் 1540இல் நாவிதர்கள் அறுவையாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தார்கள் (Company of Barber - Surgeons). ஆனால், நடைமுறையில் முடிவெட்டுதலையும், சவரம் செய்தலையும் செய்து வந்த நாவி தர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.  பிரான்சில் 1743ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தில் 1745ஆம் ஆண்டிலும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நாவிதர்களிடமிருந்து பிரிக் கப்பட்டு இருந்தனர்.  1800ஆம் ஆண்டில் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் தோற்றுவிக் கப்பட்டதிலிருந்து நாவிதர்கள் இணைப்பை இச்சங்கம் முழுமையாகத் துண்டித்தது.  இதன் எச்சமாகவே இன்றும் இங்கிலாந்தில் எம்.ஆர்.சி.எஸ்.  என்ற அறுவை சிகிச் சைப்பட்டம் பெற்ற பின்பு டாக்டர் என்று அழைக்கப்படாது திரு, திருமதி, செல்வி (Mr, Mrs, Miss) 
என்றே பட்டத்திற்கு முன் போட்டுக் கொள்கின்றனர்.

நாவிதர்கள் அறுவை சிகிச்சையின் முன்னோடிகள்:

உலகில் நாவிதர்கள் அறுவை சிகிச்சை செய்தனர், பேராசிரியர்களாக இருந்தனர் என்பதைத் தாண்டி, இந்தியாவில் அறுவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்து வளர்த்தது நாவிதர்களேயாவர்.  இது குறித்து பண்டைய வரலாற்றறிஞரான டி.டி. கோசாம்பி, “போரில் அல்லது நோயில் மூக்கிழந்தோருக்கு மாற்று மூக்கு ஒட்டறுவை முறை, சமூகத்தினர் சற்று அருவருப்புடன் நோக்கிய நாவிதரின் கண்டுபிடிப்பே” என்கிறார்.  இது தவிர இந்நாவிதர்கள் சமூகத்தைச் சேர்ந்த உபாலி என்பவர் பவுத்த சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.  இப்பவுத்தர்கள் காலத்தில் தான் மெய்ஞான அறிவியலோடு அறுவை சிகிச்சையானது தோன்றி வளர்ச் சியடைந்ததாக வரலாற்றறிஞர் வாட்ஸ் குறிப்பிடுகின்றார்.

ஆனால், இன்றைய நிலையில் தமிழ் நாட்டுக் கிராமங்களில் மக்களுக்குத் தேவையான முக்கியமான பணிகளை செய்துவந்த 18 வகைத் தாழ்த்தப்பட்ட இனங்களுடன் நாவிதர்களும் அடங்குவர்.  இந்த இனத்தினர் யாவரும் குடிமக்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.  இப்பதி னெட்டு வகை இனத்தவரும் குடிமக்கள் பிரிவினைச் சேர்ந்தவராகக் கருதப்பட்ட போதிலும் நாவிதக் குலத்தைச் சேர்ந்தவர் மட்டிலும் குடிமக்கள் என்ற பெயரை இன்றுவரை தக்க வைத்துக் கொண்டிருக் கின்றனர்.  ஏனெனில் கிராம மக்களுக்கு முடி வெட்டும் சேவையுடன் மங்கலக் காரி யங்கள் மட்டுமின்றி அமங்கலக் காரியங் களுக்கும் அவசியமான பணிகளை நாவி தர்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

இவைகளைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றன.  சான்றாக மங்கலச் சடங்கு களின்போது அடிப்படைப் பணி களில் நாவிதர்கள் ஈடுபட்டிருந்தமையால் அவர்கள் மங்கல வினைஞர், மங்கலையன் என்றும், நாவிதப் பெண் மங்கலை என்றும் அழைக்கப்பட்டனர்.  இதுவே, கொங்கு மண்டல சதகத்தில் மங்கலை எனும் சொல் நாவிதப் பெண்ணைக் குறிப்பிடப் பயன் படுத்தப் பட்டுள்ளது.  மங்கலம் என்னும் சொல் மருத்துவ குலத்தைச் சேர்ந்தோரின் பெயர்களுடன் இணைத்துக் காணப்படு வதாக முதுநிலை கல்வெட்டாய் வாளர்கள் ஏ. சுப்பராயலுவும், கே.ஜி. கிருஷ்ணனும் குறிப்பிட்டுள்ளார்கள்.  இவ்வாறு பெயர் களுடன் மங்கலம் என்ற அடைமொழியும், இணைக்கப்பட்டுள்ளதைத் தெரிவிக்கும் சில சான்றுகளாவன. “மூவேந்தர் மங்கலப் பேரரையன் மாறன்காரி”, “பாண்டி மங்கல விசையரையன் மாறன் எயினன்” என்ப தாகும்.

அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புக ளுக்கும், வளர்ச்சிக்கும் தேவையானது உடல்கூறு அறிவு. இதற்குச் சவப் பரி சோதனை அவசியம்.  இது இந்தியாவில் இந்து மதக் கோட்பாட்டின்படி ஒரு விதி யாகப் பிணம் எரிக்கப்படுவதாலும், அல்லது ஆற்றில் மிதக்க விடுவதாலும் மற்றும் மனு சாஸ்திரம் ஒரு சண்டாளனை, ஒரு பிரே தத்தை அல்லது பிரேதத்தைத் தொட்ட ஒருவனை யதேச்சை யாகத் தொட நேர்ந்து விட்டால் குளிப்பதன் மூலம் மீண்டும் ஒருவன் தனி பரிசுத்தத்தைப் பெறுவான் என்பதாலும், புத்த சமண மதங்களும், திருக் குறளும், கொல்லாமையைப் போற்றுவதா லும் உடல்கூறு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே தழைக்கவில்லை எனலாம்.  இக்காரணத்தை மிகவும் துல்லிய மாக ஆய்ந்த சட்டோபாத்தி யாயா அறுவை சிகிச்சைக்கான வளர்ச்சியில் மேல் சாதியி னருக்கு எவ்விதப் பங்கும் இருந்திருக்க வில்லை என்பதை விளக்கமாக “உடலை முதன்மைப் படுத்தியதால்தான் தந்திரர் ரசவாதம், ரசாயனம் போன்ற அறிவியல் களை வளர்க்க முடிந்தது.  வைதீகர், தூய ஆன்மாவைத் தேடியதால் உடம்பின் மீது கவனம் செலுத்தவில்லை.  பிணங்களை வைத்துக் கீழ் சாதியினரே அறுத்து ஆராய்ந் தார்கள்.  இதை மேல் சாதியினர் தீட்டாகக் கருதியதால் ஒதுக்கினார்கள்.  தவிர ‘தந்தி ரரின் சவ சாதனை’ மனித உடல் பற்றி அவர் கள் அறிய உதவியது.  இன்றும் கூட, (1959) பிணத்தைத் தொட மேல்சாதியார் மறுப்ப தால் அறிவியலை மறுக்கிறார்கள்”, என்கிறார்.

சோழர் காலத்தில் அறுவை மருத்துவர்கள் - நாவிதர்கள்

சோழர் காலத்தில் நாவிதர்கள் மிகவும் உன்னத நிலையில் சிறப்புற்றிருந்தது கல் வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது.  இராஜராஜனின் கி.பி. 1014-ஆம் ஆண் டைய கல்வெட்டொன்றில் பஞ்சவன் மங் கலப் பேரரையன் அனையன் பவருத்திரன் மற்றும் இராஜராஜ பிரயோகத்தரையன் என்னும் பெயர் கொண்ட அறுவை சிகிச்சை செய்தவர்களைப் பற்றிக் குறிப் பிடப்பட்டுள்ளது.  பிரயோகம் என்ற சொல் மருத்துவ சிகிச்சையைக் குறிப்பிடும் சொல் லாகும்.  எனவே பிரயோகத்தரையன் என்ற சொல் மருத்துவ சிகிச்சை செய்பவனைக் குறிப்பிடு வதாகும். அனையன் பவருத் திரன் என்பவர் கோலினமை (கோலினமை - கோலி - மயிர்) என்ற தொழிலில் வல்ல வன் என்ற குறிப்பு வருகின்றது.  இப்பெயருக்கு அருகில் இராஜராஜ பிரயோகத் தரையன் என்ற சொல் மருத்துவரைக் குறிக்கும்.  அம்பட்டன் என்ற சொல்லும் மருத்துவரைக் குறிக்கும்.  எனவே கோலினமை என்ற சொல்லும் மருத்துவத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும் என்று கல்வெட்டாய்வாளர் ஏ. சுப்பராயலு கருத்துத் தெரிவிக்கின்றார்.

திருவிடலூர் சிவயோகநாதர் ஆல யத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழனின் கி.பி. 1016ஆம் நாளிட்ட கல்வெட்டில் இராணி குந்தவை ஆர்க்காட்டு கூற்றம் சிறீ பராந்தக சதுர்வேதி மங்கலத்துச் சபையிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி அரையன் உத்தம சோழன் என்ற நாவிதனுக்குச் சல்லிய போகமாக வழங்கியதாகக் கூறப்பட்டுள் ளது. ((ARE No. 351/1907)

இதே ஆலயத்திலுள்ள மற்றொரு கல் வெட்டில் குந்தவை, இராஜகேசரி சதுர் வேதி மங்கலத்திலுள்ள ஒரு வேலி 4 மா நிலத்தையும், வேம்பத்தூரிலுள்ள ஒரு வீட்டையும் அரையன் உத்தம சோழன் என்ற இராஜேந்திர சோழ பிரயோகத் தரையன் ஆகிய அம்பட்டனுக்குச் சல்லிய கிரியா போகமாக (அறுவை மருத்துவத் தொழிலை விருத்தியடையச் செய்வதற் கான மானியத்தின் பெயர்) வழங்கி யிருப் பது தெரிய வருகின்றது. (ARE No.  350/1907)

இவ்விடத்தில் மருத்துவக் கண்டுபிடிப் புக்கு வித்திட்டவர்கள் இச்சாதியின ஆண் களா? அல்லது பெண்களா? என்ற கேள்வி முக்கியமாக எழுகின்றது.  பண்டைய காலத்தில் சடங்குகளைப் பெண்களே முன் னின்று நடத்தினர்.  இன்றும் கிராமப்புறங் களில் “பாட்டி வைத்தியம்” என்ற பெயர் புழக்கத்தில் இருப்பது அன்று பெண்களே மருத்துவம் செய்தனர் என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.

இதற்கு ஒரு இலக்கிய சான்றாகக் கொங்கு மண்டலச் சதகத்தில் கார்மேகக் கவிஞர் (9ஆம் நூற்றாண்டு) விரிவாக எடுத் துரைக்கின்றார்.

கொங்கு நாட்டு மன்னனின் மகள் பிர சவ வலியால் துன்புற்றபொழுது சிசு வெளிவராத நிலையில் ஒரு நாவிதப் பெண், வயிற்றைக் கீறி (Caesarean) சிசுவை வெளியே எடுத்ததைச் சிறப்புற விளக்குவது இங்கு நினைவு கூரத்தக்க தாகும்.

இதுபோலவே வயிற்று வலி ஏற்படும் குழந்தைகளுக்குக் குடல் தட்டி இன்று வரை நிவர்த்தி அளிப்பதும் பெண்களே ஆகும்.  மேலும் நாவிதப் பெண்கள் இன் றும் பல கிராமங்களில் பிரசவம் பார்த்து வருவது என்பது ஆதிகாலத்தில் மருத்து வத்தைக் கண்டுபிடித்து அதனை வளர்த்து இன்று வரையில் தக்க வைத்துள்ளதின் எச்சமென்பதாகும்.

நாவிதப் பெண்கள் மருத்துவச்சி என்று அழைக்கப்பட்டு, காலனி அரசு காலத்திலும் பணிபுரிந்துவந்தபொழுது இவர்களின் மருத்துவமுறை மேலை மருத்துவத்தை ஒத்து வராது, தூய்மையற்று இருந்ததன் காரணமாக, 1923இல் காலனி அரசு இவர்கள் பணியை மேம்படுத்த பல முயற்சி களை மேற்கொண்டது.  மருத்துவப் பள்ளி கள், கல்லூரிகள் தோன்றிய பிறகும் தங்கள் பொருளாதாரப் பின்னடைவினால் மேலை மருத்துவம் கற்க வாய்ப்பின்றி போனார்கள்.  ஆகவே, இவர்களுக்குத் தெரிந்த தமிழ் சித்த மருத்துவத்தைச் சிக்கெனப் பிடித்தபடி மருத்துவம் புரிந்தனர்.  யூனிசெப் மற்றும் உலக சுகாதார கணக்குப்படி (1967) மருத்து வச்சிகளால் மட்டும் 70 விழுக்காடு பிரச வங்கள் நடைபெற்றுள்ளதாக அறிய முடி கின்றது.

இதுபோலவே நாவித வகுப்பு ஆண்கள் அறுவை சிகிச்சை உட்பட பல மருத்துவப் பணிகளைப் புரிந்துள்ளனர். இவர்களால் மருத்துவம் பெற்றுக்கொள்பவர்கள் மேல் குடி மக்களாக இருப்பினும் இவர்கள் கூறு வதைக் கேட்பது மக்கள் மத்தியில் வழக் கமாக இருந்ததன் காரணமாக “எத்தைச் சொல்வானோ பரிகாரி அத்தைக் கேட்பான் நோயாளி” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

முடிவாக, நாவிதர்களை நோக்கும் போது, உலக அளவில் அறுவை மருத்துவ முன்னோடிகளாக, அறுவைக்கான கத் தியை வைத்திருந்தவர்கள் இன்றைய நிலை யில் முடி வெட்டும் கத்திரிக் கோலுடன் வலம் வருவது ஏன் என்பதை இன்னும் விரி வாகக் கூறுபோட்டு ஆராய வேண்டியவர் களாக உள்ளோம் என்பது தெளிவாகின்றது.

- நன்றி: நியூ செஞ்சுரியின்

“உங்கள் நூலகம்” ஜூன் 2017
- விடுதலை ஞாயிறு மலர், 23.12.17