பக்கங்கள்

சனி, 30 நவம்பர், 2019

நோய்தீர்க்கும் மீன் உணவு

சிதம்பரம் அருகில் கிள்ளை ஆற்றுப் பகுதிகளில் அரிய வகை மருத்துவ குணம் உள்ள மீன்கள் உள்ளன. காரை, மட்லீஸ், கிழங்கான், பிலிஞ்சான், ஓரா, பொருவா, சித்தாழை, நரிக்கெண்டை போன்ற மீன்களைக்கொண்டு ஒரு வகையான வட்டார மீன்குழம்பு செய்கின்றனர். அதனை பூண்டு, மிளகுடன் சேர்த்துச் செய்தால் மருந்துக் குழம்பு என்றழைக்கின்றனர்.பேறுகாலத்தில் பெண்களுக்கு வலி நிவாரணியாகவும் சோர்வைப் போக்குவதற்கு உதவுவதாகவும் இக்குழம்பு இருக்கிறது.  கணவாய் மீனிலுள்ள மக்னீசியம், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

திலேப்பியாவில் உள்ள செலினியம் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பால்சுறா மற்றும் திருக்கை மீன்கள் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்கிறது.சாளை மீனில் உள்ள அயோடின் கழுத்துக் கழலை நோயைத் தடுக்கிறது. கெளுத்தியிலுள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. கெண்டை மீனிலுள்ள பொட்டாசியம் தசையின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. ஆளி மீனிலுள்ள தாமிரச் சத்தில் இன்சுலின் சுரக்கச் செய்யும் மருத்துவ குணம் உள்ளது. மத்தி, ஆரை, கவலை போன்ற மீன்களிலுள்ள ‘ஒமேகா 3’ அமிலமானது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை வளர்த்து, ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி, நரம்புகளின் செயல்பாட்டை அதிகரித்து, நல்ல பார்வைத் திறனைத் தந்து உடம்பிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தக்கூடியவை.

-  உண்மை இதழ், 1-15.10.19