பக்கங்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

குதிகால் வலிக்கு நிவாரணம்


குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற் பட்டுள்ளதா என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால்  பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும்.
உள்ளங்கால் மற்றும்  கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு  படுக்கும் முன்னும், காலையில் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.
சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லியும் கலந்து ஒரு இரும்பு கரண்டியில் சிறிது எண்ணெயை (10 மி.லி.) சூடு செய்து  இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு,
குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து(20 நிமிடங்கள் வரை ) வெந்நீர் நிரப்பிய  பாத்திரத்தில் கால் மூழ்குமளவு 10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில்  குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம்.
கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபயோகிக்கவும். திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்டுகள்  காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.
சித்தரத்தை,  அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால்  மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம்  அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குணமாகும். குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும்  சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும்.
பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத்  தடுக்கலாம். அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வரக் காரணமாகின்றது.
ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம்  ஏற்படுத்தி, உங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது.
-விடுதலை,2.3.15

சனி, 5 டிசம்பர், 2015

இழுப்பு என்னும் இசிவு நோய்


குழந்தைக்கு இழுப்பு நோய் வந்தால் கை-கால் உதறி பல் கிட்ட ஆரம்பிக்கும். உடனே காயப்படுத்தாத சிறு பென்சில் அல்லது கட்டையை இரு பல் வரிசைக்கு நடுவே வைத்து விடவேண்டும் பிறகு இஞ்சியை தட்டி சாறு எடுத்து சர்க்கரை சேர்த்துப் புகட்டிவிட வேண்டும். பூண்டைத்தட்டி ஒரு துணியில் கட்டி விளக்கில் காட்டினால் அதிலிருந்து ஒரு எண்ணெய் வழியும் அதை உள்ளங்கை மற்றும் உள்ளங்கால், விலா முதலிய இடங்களில் தடவ வேண்டும்.
வேப்பெண்ணெய்யும் தடவலாம். சிறு குழந்தைகள் இருக்குமிடத்தில் இந்த எண்ணெய்யை வைத்திருப்பது நல்லது. குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வந்தால், தினசரி 3 வேளை, 2 தேக்கரண்ழ அளவு திராட்சைப் பழச்சாறு கொடுங்கள். வலிப்பு நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் திராட்சைப் பழத்திற்கு மட்டுமே உண்டு.
தூதுவளை இலைச்சாறு இஞ்சிச்சாறு, துளசிச்சாறு இவைகளை ஒன்று சேர்த்து, அதற்கேற்ப தேன் சேர்த்து, ஒரு தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்கு 3- நாட்கள் கொடுக்க, தெக்கத்திக்கணை என்னும் இழுப்பு உடனே நிற்கும். கபம் கரைந்து ஆரோக்கியம் பெறும்.  சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிந்து இருக்கும். அதை நீக்க மாசிக்காயை சந்தனக்கல்லில் உரசி.
அந்த விழுதை குழந்தையோட நாக்கில் தடவினால் போதும். சின்னக் குழந்தை வாந்தி பண்ணினால் வசம்பைச்சுட்டுப் பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து, நாக்கில் தடவினால் உடனே குணம் கிடைக்கும்.
வசம்புக்கு பிள்ளை வளர்ப்பான்னு பேரே உண்டு. குழந்தைகளுக்கு வாந்தியும், பேதியுமானால், மருந்துக் கடையில் கிடைக்கக் கூடிய துளசி விதையை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து, ஒரு சங்கு வீதம் கொடுக்க, உடனே நிற்கும். துளசிச் சாற்றில் ஒரு காசு எடை எடுத்து வெற்றிலையில் விட்டு கொஞ்சம் தேன் சேர்த்துக் குழப்பி குழந்தையின் வாயில் தடவினால் வாந்தி நின்றுவிடும். குழந்தை நன்றாகப் பால் குடிக்கும்.
துளசி விதையை நனறாக அரைத்துப் பசும்பாலில் கலந்து, ஒரு சங்கு வீதம் கொடுக்க வாந்தியும் பேதியும் உடனே நிற்கும். ஒரு வயது குழந்தைக்கு பல் முளைக்கும்போது, மலக்கட்டு உண்டாகும். ஜலதோஷம், காய்ச்சல் உண்டாகும். அப்போது திராட்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து, தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு கொடுத்துவரவும்.
-விடுதலை,10.9.12