பக்கங்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

குதிகால் வலிக்கு நிவாரணம்














குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற் பட்டுள்ளதா என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால்  பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும்.
உள்ளங்கால் மற்றும்  கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு  படுக்கும் முன்னும், காலையில் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.
சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லியும் கலந்து ஒரு இரும்பு கரண்டியில் சிறிது எண்ணெயை (10 மி.லி.) சூடு செய்து  இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு,
குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து(20 நிமிடங்கள் வரை ) வெந்நீர் நிரப்பிய  பாத்திரத்தில் கால் மூழ்குமளவு 10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில்  குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம்.
கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபயோகிக்கவும். திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்டுகள்  காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.
சித்தரத்தை,  அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால்  மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம்  அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குணமாகும். குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும்  சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும்.
பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத்  தடுக்கலாம். அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வரக் காரணமாகின்றது.
ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம்  ஏற்படுத்தி, உங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது.
-விடுதலை,2.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக