பக்கங்கள்

வெள்ளி, 11 நவம்பர், 2016

ஆரியத்தின் ஆதிக்கத்தில் தமிழ் மருத்துவம்


ஒவ்வொரு இனமும் தனக்கென தனித்துவமான பாரம்பரியம் கொண் டுள்ளது. மொழி, கலைகள், பண்பாட்டு கூறுகள் மற்றும் மருத்துவம் இவை தான் பெரும்பாலும் ஒரு  இனத்தின் அடையாளங்களாக உள்ளன.
மொழியை அழித்து விட்டால் இனத்தின் வரலாற்றை எளிதில் அழித்து விடலாம்.  ஏனென்றால் மொழி என்பது தொடர்பு கருவி. வர லாற்றின் நீட்சி. அது சார்ந்த இனத்தின் ஆவணம்.
தமிழின் [திராவிடத்தின்] தனி சிறப்பு என்று எங்கும் பார்க்க முடியாத சூழல்.....கலைகள், பண்பாடு ,மருத்துவம் என எதிலும் ஆரிய சமஸ்கிருத கலப்பு.....இதனை தமிழன் உள்வாங்கிய கூறுகள் என்று கூறுவதை விட திரா விடத்தை,
[தமிழை] அழிக்க திட்டமிட்டு திணிக்கப் பட்ட கூறுகள் என்று சொல்வதே மிக சரியானது.  அது ஆரியத்தின் உள்வாங்கி அழிக்கின்ற தத்துவமோ,இல்லை அடிப்படையை அசைத்து பார்க்கின்ற வன்மமோ எதிலோ இழந்தோம் இருந்தவற்றை எல்லாம் தமிழர்களாகிய நாம்.
நோயை விட கொடிய துன்பம் ஏது? என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் நமக்கென்று பொக்கிஷமாக ஒரு மருத்துவ முறையை விட்டு சென்றுள் ளனர். தாது, தாவர ஜீவப் பொருள் கள் என அனைத்தையும் மருந்தாக பயன்படுத்தி உள்ளனர்.
நோய் நாடி pathology 

நோய் முதல் நாடி etiology

அது தணிக்கும் வாய்நாடி treatment
என அனைத்தையும் பேசி உள்ளான் ...
உடம்பை பாதுகாக்கும் அத்தனை வழிமுறைகளையும், (காய கற்ப முறை கள், யோகம்) நோய் வந்தால் நீக்கும் வழிகளையும வகுத்து உள்ளனர்.
இன்னமும் தமிழ் மண்ணின் மருத்துவர்களான சித்தர்கள் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்களாகவோ அல்லது வழிபாட்டு முறைகளை விமர் சிப்பவர்களவோ தான் இருந்து உள் ளனர்.
“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே ...
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையிலே’’ -
சிவவாக்கியர் சித்தர் பாடல் மூலம் அறியலாம்.
அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி   என அணுவையும் துளைக்க முடியுமென சொன்னது நம் மருத்துவ   அறிவியல்.
கடினமான இரும்பு,காந்தம் போன்ற உலோகங்களை நீரில் மிதக்கும் பற் பங்கள் ஆக்கியது நம் மருத்துவ  அறி வியல்.
கண்ணில் காணும் பச்சை எல்லாம் நோய் தீர்க்கும் மருந்துகள் என   பாடம் நடத்தியது நம் மருத்துவ அறிவியல்.....
4448 நோய்கள் என வகுத்து நுணுக்கமாக  சொல்லி தந்து இன்றைக் கும் உள்ள நோய்களுக்கும் தீர்வாய், தீர்க்கமான அறிவியலாய் நிமிர்ந்து நிற்கிறது.
அன்றைக்கு இருந்த சித்தர்கள் ஆன் மாவுக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு என்று உளறி வைக்கவில்லை.
இன்றைக்கோ சித்த மருத்துவத்தின் இடை செருகளாய் ,ஜோதிடம், பஞ்ச பட்சி, சரநூல்...என்ற கேவலங்கள்.
மூட நம்பிக்கையின் புதர்களாக மண்டி கிடக்கிறது  நம் அறிவியல் மருத் துவம் ....
எதையெல்லாம் புனிதம் என்றார் களோ , அவற்றை எல்லாம் ஆராய்ச் சிக்கு அப்பாற்பட்டதாய் விலக்கி வைத்த  மூடத்தனம் இதிலும் உள்ளது....
ஆராய்ச்சிக்கு  உட்படாததை அறி வியல் உலகம் என்றைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது?
சித்தர்களின் முதல் கோட்பாடாய் சைவ சித்தாந்தை போதிக்கும் அவலம். இதுவே சித்தத்தின் முதல் சறுக்கல். இந்திய மருத்துவத்துறையின் ஒரு அங்கமாக 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், சில தனியார் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
5லு ஆண்டுகால பட்டப்படிப்பு [B.S. M.S] மேலும் 3 ஆண்டுகால பட்ட மேற்படிப்பு M.D. [S] என ஏறத்தாழ 8லு ஆண்டுகள் படிக்க வேண்டி உள்ளது. அதன் பாடத்திட்டம் திட்ட மிட்டு திணிக்கப் பட்ட ஆரிய கூறுகள் அடங் கியது. அறிவியலுக்கு எதிரானது. ஆரியத்தின்  தாக்கம் நிறைந்தது. இன்னமும், 65 ஆண்டுகளாக மாறாத ஒரே  பாடத்திட்டம் கொண்டது....
ஆரியர் என்பவர் அரியர், மேன்மை யானவர், தமிழ் சமூகத்தில் மேம் பட்டோர் என்ற தவறான வரலாறும்  ,பிராமணர் என்றால் ஒழுக்கமானவர் என்றும் [பாடநூல்- தோற்ற கிராம ஆராய்ச்சி] சக்கிலியர், பறையர் இருக்கும் இடத்தில் வீடு கட்டக்கூடாது என்றும் [பாட நூல்  நோய் இல்லா நெறி பக்கம் 37] என இன்றைக்கும் சட்டத்திற்கு முரண் பட்ட , மனு தர்ம மொழிகளை போதிப்பதாக உள்ளது.
பாடத் திட்டம் வகுத்தவர்கள் மற்றும் எழுதியவர்கள்  மிக சிறந்த ஆரிய அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை இதன் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இன்றைக்கு தமிழ் மருத்துவம், septic tank தவற விடப் பட்ட புதையல் மாதிரி மூட நம்பிக்கைகளோடு மூழ்கி கிடக்கிறது.
அடுத்த தலைமுறைக்கு இந்த மருத்துவத்தை நாம் விட்டு செல்லும் போது,    திருத்தப்பட்ட தத்துவங்கள்    முழுமையாக்கப்பட்ட அறிவியல் நிறைந்ததாக முழுக்க முழுக்க அறிவியல் சார்பு உடையதாக மாற்றப்பட வேண்டும்.
மத்தியில் எந்த ஆட்சி அமைந்தா லும், இந்திய மருத்துவத்துறையில்  ஆயுர்வேதத்திற்கே முன்னுரிமை என்பது எழுதப் படாத இந்திய அரசியல் விதி. ஏனென்றால் அது ஆரிய மருத்துவம். பாற்கடலை திருமால் கடைந்த போது கலசத்தோடு வந்த தன் வந்திரியால் இயற்றப்பட்டது [என்ன ஒரு கட்டுக்  கதை?
இதற்கு கோடி, கோடியாக செல வழிக்க அரசு எப்போதும்  தயாராக இருக்கும். அது கடவுளின் மருத்துவம் அன்றோ [?]
ஆயுர்வேதமும்,சித்த மருத்துவமும் ஒன்று என்று பொதுப்படையாக அறியப்பட, இரண்டிற்கும் உள்ள வித்தி யாசம் என்ன என்றால் அது ஆரியத் திற்கும், திராவிடத்திற்கும் உள்ள வித்தியாசம் என தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இரண்டும் ஒன்றுபோல் இருக்க காரணம் , திராவிட மருத்துவத்தை சிற்சில மாற்றம் செய்து உருவானதே ஆயுர்வேதம்.....அது முழுக்க முழுக்க இந்துத்துவ மருத்துவம் ....இந்து கடவுள் களோடு சேர்த்து பரிமாறப்படுவதால் தான் அது இந்திய மருத்துவம் ஆக உயர்ந்து உலகம் முழுக்க அடையாளப் படுத்தப் படுகிறது.
கலப்பு செய்யப்பட்ட தமிழ் மருத் துவத்தில் இருந்து மத சாயத்தை நீக்கி னால் தான் முழுமையான மருத்துவ அறிவியல் பெற முடியும்.
எப்படி தமிழ் சமூதாயத்தின்  பண் பாட்டுடன் ஆரியம் கலந்ததோ, இன் றைக்கும் பிரிக்க முடியாததாக இருக் கின்றதோ, அது போன்றே தமிழ் மருத் துவத்திலும் ஆரியம் கலந்துள்ளது.
மீட்டெடுப்பு பணி என்பது தமிழ் மருத்துவத்திலும் அவசியம்.
Dr.C. கவுதமி தமிழரசன் M.D[S]
-விடுதலை ஞாம.20.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக