பக்கங்கள்

திங்கள், 20 டிசம்பர், 2021

மூலிகை மருந்துகளின் தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் அனுமதி நடைமுறையை அரசு நிர்ணயித்தது

ஆயுஷ்

மூலிகை மருந்துகளின் தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் அனுமதி நடைமுறையை அரசு நிர்ணயித்தது

Posted On: 06 FEB 2018 1:46PM by PIB Chennai

ஆயுர்வேத மருந்தியல் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தரமான 645 தனித்தன்மை ஆயுர்வேத மருந்துகளும், 202 கலப்பு மருந்துகளும் அடங்கியுள்ளன.  அரசு வெளியிட்டுள்ள யுனானி மருந்துப் பட்டியலில் தரமான 298 தனித்தன்மை கொண்ட மருந்துகளும், 150 கலப்பு மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.   சித்தா மருந்துப் பட்டியலில் 139 தனித்துவ மருந்துகள் இடம்பெற்றுள்ளன.  985 ஆயுர்வேத மருந்துகள் 1,229 யுனானி மருந்துகள், 399 சித்தா மருந்துகள் ஆகியவற்றை அரசு தரப்படுத்தி அறிவித்துள்ளது. இந்த மருந்துகளில் அடங்கியுள்ள பொருட்களின் பெயர்களும் சம்மந்தப்பட்ட மருந்தியல் பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றுக்கான மருந்தியல் ஆணையமும் மற்றும் மருந்தியல் குழுக்களும் ஆயுர்வேத, சித்தா, யுனானி மருந்துகளை தரப்படுத்தி அமைப்பது தொடர்ந்து நடைபெற்றுவரும் செயல்முறையாகும். இந்த மருந்துகளை சோதிப்பதற்கான மத்திய மற்றும் மாநில மருந்து சோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1945 மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விதிகளின்படி அங்கீகாரம் பெற்ற சோதனைக் கூடங்கள் இந்த மருந்துகளை சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட மருந்தியல் ஆவணங்களின்படியான தரங்கள், நல்ல உற்பத்தி நடைமுறைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு மருந்து தயாரிப்பாளர்கள் செயல்பட்டால்தான் உரிமங்களைப் பெறும் தகுதி பெறுவார்கள்.  பாதுகாப்பு மற்றும் திறன் சார்ந்த அத்தாட்சிகள் தயாரிப்பு உரிமங்கள் வழங்குவதற்கு மிகவும் தேவையானவை.           1945 - மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் விதிகளின் 158 B பிரிவில் கண்டுள்ளபடி, பல்வேறு வகை ஆயுர்வேத, சித்தா, யுனானி மருந்துகளுக்கு இந்த நடைமுறை பொருந்தும். இந்த சட்டத்தின்படி, மாநில அரசுகள் நியமித்த உரிமம் வழங்கும் ஆணையங்கள் / மருந்து கட்டுப்பாட்டாளர்கள் இத்தகைய உரிமங்களை வழங்கவும், புதுப்பிக்கவும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவார்கள்.  சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொள்ளும் மருந்து தயாரிப்பாளர்கள்மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் இவர்களுக்கு அதிகாரம் உண்டு.

1940-மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் மூலிகை மருந்துகள் அந்தப் பெயரில் வரையறை செய்யப்படவில்லை.  எனினும், மூலிகைகள், தாவரப் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத, சித்தா, யுனானி மருந்துகள் நாட்டில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு நெறிகளின்படி கட்டுப்படுத்தப்படுகின்றன.  இந்த நெறிமுறைகள் 1940 மருந்துகள் மற்றும் அழகுசாதனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் வருபவை ஆகும்.  இந்த வகையில், போலி மருந்துகள் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன.  போலியான, வேண்டுமென்றெ தவறாக வர்த்தகப் பெயர் பொறிக்கப்பட்ட, கலப்படம் செய்யப்பட்ட மருந்துகள் பற்றி 1940 மருந்துகள், அழகு சாதனங்கள் சட்டத்தின் அத்தியாயம் IV-Aல் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் தவறிழைப்பவர்களுக்கான தண்டனை விவரங்களும் தரப்பட்டுள்ளன.  தரக்குறைவான மருந்துகள் குறித்த புகார்கள் சம்மந்தப்பட்ட மாநில கட்டுப்பாட்டு அதிகார அமைப்பிடம் அளிக்கப்படவேண்டும்.  இந்த அமைப்புகள் சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்.

2017-18ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சோதனைக் கூடங்கள் நடத்திய ஆயுர்வேத, சித்த, யுனானி மருந்துகளின் சோதனை விபரங்கள் வருமாறு.

 

 

மாநிலம்

சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மருந்து மாதிரிகளின் எண்ணிக்கை

தகுதியற்றவை எனக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து மாதிரிகள் எண்ணிக்கை

மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

தமிழ்நாடு

1255

39

காரணம் காட்டக் கோரும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன

புதுச்சேரி

16

இல்லை

 

மாநிலங்களவையில் இன்று (06.02.2018) ஆயுஷ் துறை (தனிப் பொறுப்பு)  இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் யஸோ நாயக் எழுத்துமூலம் அளித்த பதிலில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 (Release ID: 1519451) Visitor Counter : 1488


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக